Archives: பிப்ரவரி 2022

ஆற்றுக்கு அப்புறம்

குடும்பத்தினர் செய்ய ஆயத்தமாயில்லாத எந்த காரியத்தையும் அவர்கள் செய்ய வேண்டும் என்று ராஜா எதிர்பார்க்கவில்லை. ஆற்றுக்கு அப்புறத்திலிருக்கும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு தன்னுடைய தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்தை கூட்டிச்செல்லுவதற்கு இடையில்…

தொலைந்த பரதீசு

பாவமறியாத தங்களுடைய குணாதிசயத்தை இழந்த இந்த பராமரிப்பாளர்கள், தாங்கள் சற்றும் எதிர்பாராத ஒரு பாதையில் பயணிக்கத் துவங்கினர். அவர்கள் ராஜாவைப் பார்க்க விரும்பாதது இதுவே முதல் முறை.…

ராஜாவின் தரிசனம்

வெகு காலத்திற்கு முன்பு, டைனோசர்கள் வாழ்ந்ததற்கு முன்பு, கடலின் ஆழத்தில் எண்ணெய் ஆறுகள் ஓடியதற்கு முன்பு, ஒரு பெரிய ராஜா இருந்தார். இந்த ராஜா எங்கிருந்து வந்தவர்…

கதைகளிலே சிறந்த கதை

உலகம் கதைகளால் நிறைந்தது. ஆனால் அவைகள் எல்லாவற்றிலும் சொல்லுவதற்கு உகந்த ஒரு கதை உண்டு. அது உலக மக்களால் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று பரவலாய் அறியப்பட்ட 66 ஆகமங்களின் தொகுப்பிலிருக்கும் அன்பின் கதை.

ஆனாலும் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்கள் இந்த கதையை தொடர்ச்சியாய் சொல்லத் தவறுவதால், அதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் முழுமையான கதையை தவறவிட நேரிடுகிறது.

பின்வருவது மார்ட் டிஹானின் அந்தக் கதையின் மறுகதையாடலாகும். இதில் பரிமாறப்படும் கற்பனைகள், காலங்களைக் கடந்த வேதாகமத்தில், நாம் அறிந்த நபர்கள், இடங்கள், மற்றும் சம்பவங்கள் ஆகியவைகளை…

ஞானமுள்ள அறிவுரை

ஏப்ரல் 2019 அன்று பாரிசில் உள்ள நோட்ரே டேம் தேவாலயத்தின் கூரை தீப்பிடித்து, அதின் பண்டைய கால மர உத்திரமும், கூரையில் செய்யப்பட்டிருந்த ஈயமும் இணைந்து அடுப்பைப் போல எரிந்து, அதிக சூட்டின் நிமித்தம் நிற்க கூடாமல் விழுந்தது. தேவாலயத்தின் உச்சி கோபுரம் பயங்கரமாக விழுந்த பின்னர், இப்பொழுது அதின் மணி கூண்டுகளுக்கு நேராக நெருப்பின் கவனம் திரும்பியது. எஃகினால்  செய்யப்பட்ட ராட்சத மணிகளின் மரச்சட்டங்கள் எரிந்துவிட்டால், அவைகள் நிலைகுலைந்து இரு மணி கூண்டுகளையும் கீழே விழத்தள்ளி, தேவாலயத்தை தரைமட்டமாக்கி விடும்.

தன்னுடைய தீயணைப்பு வீரர்களின் பாதுகாப்பிற்காக அவர்களை திரும்பப் பெற்றுக்கொண்ட பாரிஸ் நகரத் தீயணைப்புத் துறையின் படைத்தலைவர் ஜெனரல் கல்லெட், அடுத்து என்ன செய்வதென்ற யோசனையிலிருந்தார். அப்பொழுது ரெமி என்ற தீயணைப்பு வீரர் தயக்கத்தோடு அவரை அணுகி, "மரியாதைக்குரிய தலைவர் அவர்களே, நான் கோபுரங்களின் வெளிப்புறமாக மேலே நீர் குழாய்களின் மூலம் தண்ணீரை பீச்சி அடிக்கலாம் என்று ஆலோசனை சொல்லுகிறேன்" என்றார், ஆனால் கட்டிடத்தின் உறுதியற்ற தன்மையை கருத்தில் கொண்டு படைத்தலைவர் இந்த யோசனையை நிராகரித்தார். இருந்தபோதிலும் ரெமி தொடர்ந்து அவரோடு தன் கருத்தை வலியுறுத்தினார். சீக்கிரத்தில் படைத்தலைவர் கல்லெட் ஒரு தீர்மானத்திற்கு வரவேண்டி இருந்தது, இளைய தீயணைப்பு வீரரின் அறிவுரையை பின்பற்றுதல் அல்லது தேவாலயம் இடிவதற்கு அதை விட்டுவிடுதல்.

ஆலோசனையை பின்பற்றுவதை குறித்து வேதம் அதிகமாக பேசுகிறது. சில சமயங்களில், வாலிபர் முதியோருக்கு கொடுக்கும் மரியாதையை இப்படி குறிப்பிடுவதாக இருந்தாலும் (நீதிமொழிகள் 6:20-23), பெரும்பாலும் அப்படி இல்லை. நீதிமொழிகள் சொல்கிறது, "ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்."(12:15) "நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்."(24:6.) மேலும், "மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்" (12:15) என்று. ஞானமுள்ளவர்கள் ஆலோசனைகளுக்கு செவிகொடுப்பர், அதை கொடுப்பவர் எவ்வயதினராயினும், எந்த பதவியிலிருப்பவராயினும் அதை பொருட்படுத்த மாட்டார்கள்.

ஜெனரல் கல்லெட், ரெமிக்கு செவிகொடுத்தார். எரிந்துகொண்டிருந்த மணிகூண்டுகளின் சட்டங்களில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட, சிறுது  நேரத்திலேயே தேவாலயம் காப்பாற்றப்பட்டது. இன்றைக்கு உங்களுடைய எந்த பிரச்சனைக்கு தேவாலோசனை தேவை? சிலசமயம் தேவன் தாழ்மை உள்ளவர்களை இளையவர்களின் வாய்வார்த்தைகளை கொண்டும் நடத்துகிறார்.

நாம் எல்லோரும் ஒன்றே

சிறிய விவசாய சமூகத்தில் செய்தி வேகமாக பரவுகிறது. ஜெயந்தின் குடும்பத்திற்கு ஆண்டாண்டு காலமாக சொந்தமாக  இருந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் வங்கி விற்ற பிறகு, அந்த சொத்து விற்பனைக்கு மீண்டும் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பல தியாகங்கள் மற்றும் சேமிப்புகளுக்கு பின்னர் ஜெயந்த், சுமார் 200 உள்ளூர் விவசாயிகள் கூடியிருந்த அந்த ஏலமெடுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜெயந்தின் அற்பமான ஏலத் தொகை போதுமானதாக இருக்குமா? இப்பொழுது ஏலதாரர் உயர்ந்த ஏலத் தொகையை அறிவித்து ஆரம்பித்த பின்னர், ஜெயந்த் ஒரு பெருமூச்சோடு தனது முதலாவது ஏலத் தொகையை அறிவித்தார்.  ஏலதாரர், ஏலத்தின் முடிவை அறிவிக்கும்வரை அவரை சுற்றி இருந்த கூட்டம் அமைதியாய் இருந்தது. சக விவசாயிகள் ஜெயந்த் மற்றும் அவருடைய குடும்பத்தின் தேவைகளை தங்கள் சொந்த பொருளாதாரத்தின் முன்னேற்றத்தை பார்க்கிலும் முதன்மைப்படுத்தியிருந்தனர்.

விவசாயிகளுடைய கருணை நிறைந்த இந்தத் தியாகச் செயல், அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் வாழவேண்டிய விதத்தை பற்றி கூறுவதை விளக்குகிறது. நம்முடைய சுயநலமான விருப்பங்களை மற்றவர்களுடைய தேவைகளை விட அதிக முக்கியத்துவம் படுத்துவதும், நம்முடைய சுயத்தை பேணுவதற்காக துடிப்பதையும் நிறுத்தும்படி பவுல் நம்மை, "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்" (ரோமர் 12:2) என்று எச்சரிக்கிறார். மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்யும்போது தேவன் நம்முடைய தேவைகளை சந்திக்க அவரை நாம் நம்பலாம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய மனங்களை புதிதாக்குகையில், நாம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனை மகிமைப்படுத்தும் நோக்கத்தோடும், அன்போடும் செயல்படுவோம். பிறரை நாம் முன்னிலைப் படுத்தும்போது, நம்மை குறித்து நாமே உயர்வாய் எண்ணுவதை தவிர்ப்போம். மேலும், தேவன் நாம் ஒரு பெரிய காரியத்தின் பகுதியாக இருப்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார் - அதுதான் சபை (வ.3-4).

பரிசுத்த ஆவியானவர், விசுவாசிகள் வேதவசனங்களை புரிந்து கொள்ளவும், கீழ்ப்படியவும் உதவுகிறார். அவர் நாம் சுயநலமில்லாமல் கொடுக்கவும், உதாரத்துவமாய் நேசிக்கவும் நம்மை பெலப்படுத்துகிறார். ஆகையால் நாம் ஒன்றாய் செழித்தோங்க முடியும்.